Print this page

விபசாரத் தடை. குடி அரசு - கட்டுரை - 29.01.1933 

Rate this item
(1 Vote)

மதுரையில் விபசாரத் தடை மசோதா அமுலுக்கு வந்திருப்பதாக தெரிய வருகின்றது. சென்னையிலும் அது முன்னமேயே அமுலுக்கு வந்துவிட்டது. மற்ற ஜில்லாக்களுக்கும் அது உடனே அமுலுக்கு வரவேண்டியதாகும். குறைந்த அளவு 30 ஆயிரம் ஜனங்கள் உள்ள ஈரோட்டில் 300 பேர்களுக்கு குறையாத விபசாரிகள் என்போர்கள் அதாவது ஒரு அணா இரண்டு அணா ரேட்டு முதல் விபசாரித்தனம் செய்து ஜீவிக்க வேண்டிய பெண்கள் இருந்து வருகின்றார்கள் என்றால் மற்ற பெரிய பட்டணங்களைப் பற்றி கேள்க்கவும் வேண்டுமா? 

விபசாரத்தடை மசோதா வருவது என்பது சற்று தாமதானாலும் ஆங்காங்குள்ள போலீஸ் அதிகாரிகளாவது இவ்விஷயங்களில் சற்று கவலை செலுத்தி அவர்கள் (விபசாரிகள்) தெருவில் நின்று மக்களை அழைப்பதையும், தெருக்களில் சில்லரைக் கலகங்களை ஏற்படுவதையும், இவர்கள் பயனாய் ஆபாச பேச்சுவார்த்தைகள் நடப்பதையும் மற்றும் சில வாலிபர்கள் காலித்தனமாய் நடக்க ஏற்படுவதையும் ஒருவாறு தடுக்கலாம் என்றே கருதுகின்றோம். 

இப்படிப்பட்ட காரியங்களில் சின்ன சிப்பந்திகள் பிரவேசிக்க இடம் கொடுக்காமல் சற்று மேல் அதிகாரிகளாய் இருப்பவர்களே பிரவேசித்து ஏதாவது செய்ய முயற்சிப்பார்களானால் உடனே காரியம் கை கூடும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம். 

குடி அரசு - கட்டுரை - 29.01.1933

Read 82 times